Friday, September 16, 2011

முதல் பாடம்



1:1அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
1:2   الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
1:2அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
1:3   الرَّحْمَٰنِ الرَّحِيمِ
1:3(அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.
1:4   مَالِكِ يَوْمِ الدِّينِ
1:4(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).
1:5   إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
1:5(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
1:6   اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
1:6நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!
1:7   صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
1:7(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

உங்கள் அனைவறின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக 

முதல் பாடத்துடன் இந்த வலைப்பூவை அறிமுகம் செய்யவும் விரும்புகிறேன் .


சொற்பொழிவில் இரண்டு வகை உள்ளது .ஒன்று தெளிந்த நீரை போல பேசுவது மற்றொன்று சுடும் நெருப்பை போல பேசுவது.இங்கே பகிர்ந்து கொள்ள போகும் செய்திகள் அனைத்தும் இறைவனின் வார்த்தைகள் நூறு சதவிதம் உண்மைகள். எனவே நீரை போலவும் பதிவுகள் எதிர்பாருங்கள் நெருப்பை போலவும் பதிவுகள் எதிர்பாருங்கள்.

நம் அனைவரையும் இறைவன் நல்வழியில் நடத்துவானாக. ஆமீன் 

No comments:

Post a Comment